செய்திகள்

புதுவையில் 5 தொகுதியில் தேமுதிக தனித்துப் போட்டி

சென்னை, மார்ச் 11–

புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தலில், தேமுதிக தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த தேமுதிக, சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாததால், அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது.

இந்த நிலையில், புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனை உறுதி செய்யும் விதமாக, 5 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலையும் அக்கட்சி வெளியிட்டுள்ளது.

புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக, ஏற்கெனவே வெளியேறியுள்ள பாமக தனித்துப் போட்டி என்று அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *