வாழ்வியல்

டெங்கு பாதித்தவர்கள் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள்!

இனிப்பு சுவையுள்ள உணவுகளைக் குறைத்து, பாகற்காய் உள்ளிட்ட கசப்பு சத்துள்ள உணவுகளை அதிகம் சேர்க்கவேண்டும். காரம் அதிகமாகச் சாப்பிட விரும்புபவர்கள் மிளகாய்க்குப் பதிலாக மிளகைச் சேர்த்துக் கொள்ளலாம். அரிசி அல்லது தானியத்தில் செய்த கஞ்சியை இரண்டு வேளை கொடுக்க வேண்டும். தினசரி 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். மேலும், பழச்சாறுகள், இளநீர், சீரகத் தண்ணீர் போன்றவற்றையும் அவ்வப்போது குடிக்கலாம்.

அன்னாசிப் பூ சேர்த்துத் தயாரித்த தேநீர், லவங்கப்பட்டை சேர்த்த டீ, திரிகடுகம் காபி ஆகியவற்றையும் குடிக்கலாம். கீரையை சூப் செய்து குடிக்க வேண்டும். அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும். எண்ணெய்யில் பொரித்த உணவுகளையும் தவிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *