செய்திகள்

12 ஆண்டுகளுக்குப் பின்னால் மீண்டும் டெல்லியில் கடுங்குளிர், பனி மூட்டம்

Spread the love

புதுடெல்லி, டிச. 25–

கடந்த 1997-ம் ஆண்டுக்குப்பின் டெல்லியில் இன்று கடும் குளிர், பனி மூட்டம் நிலவியதால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். டெல்லியில் இன்று 5.4 டிகிரி செல்சியஸ் நிலவியதால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமலும், வாகன ஓட்டிகள் வாகனத்தை ஓட்டமுடியாமல் பெரும் சிரமப்பட்டனர்

இதுகுறித்த இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” கடந்த 1997-ம் ஆண்டுக்குப்பின் டெல்லியில் டிசம்பர் மாதத்தில் நீண்ட குளிர் நாட்களும், குறைந்தபட்சமாக இன்று 5.4 டிகிரி செல்சியஸும் பதிவானது. கடந்த 1997-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 17 நாட்கள் அதிகமான குளிர் நிலவிய நாட்களாகக் கணக்கிடப்பட்டது, இந்த முறை 10 குளிர் நாட்கள் பதிவாகியுள்ளது. டெல்லியில் இன்று அதிகமான குளிரும் இனிவரும் நாட்களில் மிக அதிகமான குளிரும் இருக்கும். இன்று அதிகபட்சமாக 15 டிகிரிக்கு மேல் இருக்காது” எனத் தெரிவித்துள்ளது

டெல்லி மட்டுமல்லாது நொய்டா, காஜியாபாத், பரிதாபாத், குருகிராம் ஆகிய நகரங்களிலும் கடும் குளிராலும், குளிர்ந்த காற்றாலும் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

28-ம் தேதிவரை குடும் குளிரும், குளிர்ந்த காற்றும் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்களில் வீசக் கூடும், இரவு மற்றும் பகல் நேரங்களில் அடர்ந்த பனிமூட்டமும் நிலவும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

காற்றின் தரத்தை எடுத்துக்கொண்டால் டெல்லியில் இன்று காலை நிலவரப்படி காற்றின் தரம் 369 புள்ளிகளாக மோசமான நிலையில்தான் இருந்தது. நாளை முதல் காற்று அதிகமாக வீசும் வாய்ப்பு இருப்பதால் காற்றின் தரம் உயர வாய்ப்புள்ளதாகக் காற்றின் தரம் மற்றும் வானிலை கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *