வாழ்வியல்

ஒரு நாளைக்குக் அரை கிலோ காய்கறிகள் சாப்பிட்டால் கொரோனா எதிப்பு சக்தி தானே வரும்

எல்லாவகையான காய்கறிகளும் சாப்பிடவேண்டும். ஒருநாளைக்குக் ஒருவர் அரைக் கிலோ காய்கறிகளைச் சாப்பிடவேண்டும்.

ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் அரை கிலோ காய்கறிகள்

சாப்பிட்டால் கொரோனா எதிப்பு சக்தி தானே வரும்

சாம்பார் வைக்கும்போது நீர்க்க வைக்காமல் கெட்டியாக அதிகளவு காய்களைச் சேர்த்து வைத்துச் சாப்பிட வேண்டும்.

அதேபோல் ராகி, சாமை ,திணை, கோதுமை போன்ற சிறுதானியங்களை அன்றாட உணவில் எடுத்துக்கொள்வது அவசியம். சிறுதானியங்களில் அதிக அளவு புரதச்சத்து நிறைந்துள்ளது.

எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம் போன்ற கலந்த சாத வகைகளில் எந்தச் சத்துகளும் இருக்காது. சமையலுக்குச் செக்கு நல்லெண்ணெய், கடலை எண்ணெய் பயன்படுத்துவது நல்லது. அதேபோல் வீட்டில் அரைத்த மசாலாப் பொடிகளைப் பயன்படுத்துவது நல்லது. பொட்டலத்தில் அடைத்து விற்கப்படும் மசாலா பொடிகள் கெட்டுப்போகாமல் இருக்க ரசாயனங்கள் சேர்க்கப்பட்டிருக்கும். வீட்டில் அரைத்த சாம்பார் பொடி, கறி மசாலாப் பொடிகளைக் குழம்பில் சேர்த்துக் கொள்வதால் அஜீரணக் கோளாறு வராது.

சிறுவர்கள் ஒருவேளைக்கு மூன்று டேபிள் ஸ்பூன் காய்கறி எடுத்துக் கொள்ளவேண்டும்.

பழங்களைப் பழச்சாறாகச் சாப்பிடுவதைவிட அப்படியே பழங்களாகச் சாப்பிடுவது நல்லது. ஒரு நாளைக்கு குழந்தைகள் இரண்டு பழங்களையும் பெரியவர்கள் மூன்று பழங்களையும் சாப்பிடவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *