செய்திகள்

அண்ணா பிறந்த நாளில் காஞ்சிபுரத்தில் சைக்கிள் போட்டி

Spread the love

காஞ்சீபுரம், செப் 11–

பேரறிஞர் அண்ணாவின் 111 வது பிறந்தநாள் சிறப்பிக்கும் வகையில் காஞ்சிபுரத்தில் மாவட்ட அளவிலான மிதிவண்டி போட்டிகள் நடத்தப்படவுள்ளன என கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கலெக்டர் பொன்னையா கூறியதாவது:–

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 15–ம் நாள் முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநளை சிறப்பிக்கும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டிகள் நடத்தப்படும்.

அதன்படி இந்த ஆண்டும் பேரறிஞர் அண்ணாவின் 111–வது பிறந்தநாள் சிறப்பிக்கும் வகையில் காஞ்சீபுரம் மாவட்ட அளவிலான மிதிவண்டி போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இந்த போட்டிகள் 3 பிரிவுகளில் ஆண், பெண் இருபாலருக்கும் நடத்தப்பட உள்ளன.

அப்போது 13 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ. தொலைவுக்கும், மாணவிகளுக்கு 10 கி.மீ தொலைவுக்கும், 15 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மாணவர்களுக்கு 10 கி.மீ. தொலைவுக்கும், மாணவிகளுக்கு 15 கி.மீ தொலைவுக்கும், 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மாணவர்களுக்கு 20 கி.மீ தொலைவிலும், மாணவிகளுக்கு 15 கி.மீ தொலைவிலும் சைக்கிள் போட்டி நடைபெறும். சைக்கிள் போட்டி 15–ம் தேதி காலை 7 மணிக்கு பழைய ரயில் நிலையம் அருகில் தொடங்கி வழியாக ஒரு சாலையில் நடத்தப்பட உள்ளது.

மிதிவண்டி போட்டிகள் பங்கேற்க விரும்பும் மாணவ மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் சான்று பெற்று வரவேண்டும். செப்டம்பர் 15–ம் தேதி காலை 6.30 மணிக்கு பழைய ரெயில் நிலையம் அருகில் வையாவூர் சாலையில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் நேரில் சந்தித்து போட்டியில் பங்கேற்கலாம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *