வர்த்தகம்

15–ந் தேதி ரூ. 824 கோடி மதிப்புக்கு பங்குகள் வெளியிடும் கோவை ‘கிராப்ட்ஸ்மேன்’ நிறுவனம்

சென்னை, மார்ச் 11–

கார், பஸ், லாரி நிறுவனங்களுக்கு என்ஜின்களின் சிலிண்டர் பிளாக், அலுமினிய வார்படங்கள், வாகன உதிரிபாகங்கள் தயாரிக்க அச்சு மற்றும் தொழிற்சாலைகளுக்கு தேவையான சாதனங்கள் வடிவமைத்து தயாரிக்கும் துறையில் உள்ள கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலகப் புகழ் பெற்ற கிராப்ட்ஸ்மேன் ஆட்டோமேஷன் நிறுவனம், பங்குகளை வெளியிட்டு நிதி திரட்டுகிறது. இந்த பங்கு வெளியீடு மார்ச் 15–ந் தேதி துவங்கி, 17–ந் தேதி முடிவடைகிறது. ஒரு பங்கின் விலை ரூ.1488 முதல் ரூ.1490 வரையாக ஏல முறையில் குறைந்தது 10 பங்கும், அதன் பிறகு 10 மடங்கிலும் விண்ணப்பிக்கலாம். இது மொத்தமாக ரூ.824 கோடிக்கு பங்குகள் வெளியிடுகிறது.

இந்த நிறுவன சீனிவாசன் ரவி மற்றும் கே.கோமதீஸ்வரன் ஆகிய நிறுவனர்களின் 45.21 லட்சம் பங்குகளையும், இந்த பங்கு வெளியீட்டில் விற்பனை செய்கிறது.

இந்த பங்கு வெளியீட்டில் நிர்வாக மேலாளர்களாக அக்சிஸ் கேபிடல், ஐஐஎப்எல் செக்யுரிடிஸ் செயல்படுகின்றன. இதன் பங்குகள் விலை மும்பை தேசிய பங்கு சந்தைகளில் பட்டியலிடப்பட உள்ளது.

இந்த நிறுவனத்தின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனராக சீனிவாசன் ரவி பதவி வகிக்கிறார்.

கிராப்ட்ஸ்மேன் ஆட்டோமேஷன் நிறுவனம் வாகனங்களுக்கு தேவையான என்ஜின் சாதனங்கள் இதர உதிரி வாகங்கள் தயாரிப்பு, அலுமினிய வார் படங்கள் உற்பத்தி, தொழிற்சாலைகளுக்கு தேவையான சாதனங்கள் வடிவமைப்பு, உற்பத்தித் துறைளில் சிறந்து விளங்குகிறது.

பல்வேறு ரக என்ஜினீயரிங் கருவிகள் வடிமைத்து தயாரிக்கும் திறமை படைத்துள்ளது.

2001–ம் ஆண்டில் கோவையில் குறிச்சி தொழிற்பேட்டையில் அலுமினிய உருக்கு ஆலை துவக்கப்பட்டது முதல் படிப்படியாக வளர்ச்சியடைந்து விரிவாக்கம் செய்யப்பட்டது.

பீதாம்பூரில் இதன் யூனிட் 2005–ம் ஆண்டில் துவக்கப்பட்டது. 2007–ம் ஆண்டில் சென்னை மற்றும் ஜாம்ஷெட்பூரில் இதன் ஆலை துவங்கப்பட்டது. 2008–ம் ஆண்டில் சிங்கப்பூரில் துவக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஸ்ரீபெரும்புத்தூர், புனே, பரிதாபாத், கோவை அரசூர், பெங்களூரு நகரங்களில் இதன் ஆலைகள் உள்ளது. கோவை அரசூர் ஆலையில் 3 பிரிவுகள் உள்ளன என்றார் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர் சீனிவாசன் ரவி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *