செய்திகள்

இந்தியாவில் 13,993 பேருக்கு கொரோனா தொற்று

புதுடெல்லி, பிப்.20–

இந்தியாவில் 13,993 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை சமீப காலங்களாக பெருமளவில் குறைந்துள்ளது. எனினும் கடந்த 2 நாட்களை விட இன்றைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று உயர்ந்து காணப்படுகிறது.

இதுபற்றி மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:–

கடந்த 24 மணிநேரத்தில் 13,993 பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. ஒரு கோடியே 9 லட்சத்து 77 ஆயிரத்து 387 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று 10,307 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 6 லட்சத்து 78 ஆயிரத்து 48 ஆக உள்ளது.

கொரோனா பாதிப்புகளுக்கு 101 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 56 ஆயிரத்து 212 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 1 லட்சத்து 43 ஆயிரத்து 127 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1 கோடியே 7 லட்சத்து 15 ஆயிரத்து 204 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன என தெரிவித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 7 லட்சத்து 86 ஆயிரத்து 618 லட்சம் பேரிடம் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. நாட்டில் வைரஸ் தொற்று கண்டறிய பரிசோதனை நடத்தப்பட்டோர் எண்ணிக்கை 21 கோடியே 2 லட்சத்து 61 ஆயிரத்து 480 ஆக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *