செய்திகள்

இந்தியாவில் மீண்டும் உயரும் கொரோனா: நேற்று பாதிப்பு 18 ஆயிரத்தை தாண்டியது

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,327 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பானது கடந்த சில வாரங்களாக ஏறுவதும் இறங்குவதுமாக உள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,327 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 11 லட்சத்து 92 ஆயிரம் ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 108 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 57 ஆயிரத்து 656 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் இன்று ஒரே நாளில் 14,234 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 8 லட்சத்து 54 ஆயிரம் ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 1 கோடியே 94 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *