செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 93 லட்சத்தை கடந்தது

புதுடெல்லி, நவ.27–

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 93 லட்சத்தை கடந்தது.

இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 43,082 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 93 லட்சத்தை கடந்து, 93 லட்சத்து 9 ஆயிரத்து 787 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் 492 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு 1 லட்சத்து 35 ஆயிரத்து 715 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் தற்போது 4 லட்சத்து 55 ஆயிரத்து 555 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 87 லட்சத்து 18 ஆயிரத்து 517 பேர் மீண்டுள்ளனர். ஒரே நாளில் 39 ஆயிரத்து 379 பேர் குணமடைந்துள்ளனர்.

இதன்மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 93.65 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.46 ஆகவும் உள்ளது. மேலும் தற்போது 4.89 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 11 லட்சத்து 31 ஆயிரத்து 204 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 13 கோடியே 70 லட்சத்து 62 ஆயிரத்து 749 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *