செய்திகள்

கொரோனா பயம்: முழு விமானத்தை முன்பதிவு செய்து பயணம் செய்த நபர்

ஜகார்தா, ஜன. 8-

கொரோனா பயம் காரணமாக, முழு விமானத்தையும் முன்பதிவு செய்து இந்தோனேசியாவை சேர்ந்தவர் பயணம் செய்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலால் விமானத்தின் அனைத்து இருக்கைகளையும் முன் பதிவு செய்து, பயணம் செய்துள்ளார் இந்தோனிசியாவை சேர்ந்த ரிச்சர்ட் முல்ஜடி எனும் நபர்.

ரிச்சர்ட் மற்றும் அவரது மனைவி ஷேல்வின் சாங், கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதில் கவனமாக இருந்துள்ளனர். எனவே இந்தோனேசியாவின் தலைநகரமான ஜகார்த்தாவிலிருந்து பாலிக்கு செல்ல, ஒரு முழு விமானத்தையே முன் பதிவு செய்துள்ளார். கொரோனா தொற்று பரவி வருவதால் முன்னெச்சரிக்கையாக அனைத்து பயணச் சீட்டுக்களையும் முன் பதிவு செய்து பயணம் செய்துள்ளார்.

ரிச்சர்ட் இதனை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், புகைப்படங்களுடன் பதிவு செய்துள்ளார். யாரும் இல்லாத விமானத்தின் புகைப்படத்துடன், “ஒரு தனியார் விமானத்தை வாங்குவதை விட நான் அனைத்து இருக்கைகளையும் முன்பதிவு செய்ததுதான் மலிவானது. இதுதான் யுக்தி என குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விமானத்தில் யாரும் இல்லையென உறுதி செய்ததாகவும் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *