செய்திகள்

2வது நாளாக தமிழகத்தில் 500க்கும் குறைவானவர்களுக்கு கொரோனா தொற்று

சென்னை, பிப்.6–

தமிழகத்தில் தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் 500-க்கும் குறைவானவர்களுக்கு தொற்று ஏற்பட்டது.

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 52 ஆயிரத்து 487 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 282 ஆண்கள், 207 பெண்கள் என மொத்தம் 489 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் 158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, சிவகங்கை, பெரம்பலூரில் புதிதாக பாதிப்பு இல்லை. தமிழகத்தில் இதுவரை 8 லட்சத்து 40 ஆயிரத்து 849 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு, தனியார் மருத்துவமனையில் தலா இருவர் என 4 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இதுவரையில் தமிழகத்தில் 12,379 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 506 பேர் புதிதாக நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 24 ஆயிரத்து 24 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 4,446 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

11 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

தமிழகத்தில் நேற்று 565 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் 69 ஆயிரத்து 650 சுகாதாரப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த தடுப்பு மருந்து தயாராக வைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் 8 ஆயிரத்து 785 சுகாதாரப் பணியாளர் மற்றும் 2 ஆயிரத்து 501 முன்கள பணியாளர்கள் என மொத்தம் 11 ஆயிரத்து 286 பேருக்கு ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்தும், 109 சுகாதாரப்பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர் ஒருவர் என மொத்தம் 110 பேருக்கு ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்தும் என நேற்று மொத்தம் 11 ஆயிரத்து 396 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தமிழகத்தில் இதுவரை ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 46 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *