வர்த்தகம்

அப்பல்லோ மருந்தகங்கள் மூலம் தினசரி 10 லட்சம் கொரோனா தடுப்பூசி விநியோகிக்க ஏற்பாடு; ஆன்லைனில் செயலி மூலம் பதிவு செய்யலாம்

அப்பல்லோ மருந்தகங்கள் மூலம்

தினசரி 10 லட்சம் கொரோனா தடுப்பூசி விநியோகிக்க ஏற்பாடு; ஆன்லைனில் செயலி மூலம் பதிவு செய்யலாம்

துணைத் தலைவர் ஷோபனா காமினேனி தகவல்

சென்னை, அக்.16

கொரோனா (கோவிட் 19) வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டவுடன் அப்பல்லோ மருத்துவமனைகள் குழு, தினமும் 10 லட்சம் தடுப்பூசிகளை வழங்கத் தயாராக உள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள தனது வலுவான பார்மசிகள் மூலம் 19 மருந்து விநியோக மையங்களுடன் குளிர் சாதன வசதிகளுடனும் இம்முயற்சி செயல்படுத்தப்படும். மேலும் தனது 70 மருத்துவமனைகள், 400-க்கும் மேற்பட்ட கிளினிக்குகள், 500 கார்ப்பரேட் சுகாதார மையங்கள், 4000 மருந்தகங்களுடன் டிஜிட்டல் தளமான அப்பல்லோ 24 | 7 செயலியுடன் இணைந்து, கோவிட் 19 தடுப்பூசி நிர்வாகத்தை திறம்பட உறுதி செய்யும் பணியை அப்பல்லோ மேற்கொண்டுள்ளது என்று துணைத் தலைவர் ஷோபனா காமினேனி தெரிவித்தார்.

இந்தியாவில் சுமார் 30 சதவீதம் பேர் அப்பல்லோ மருந்தகங்களை சுமார் 30 நிமிடங்களுக்குள் அடையும் தொலைவில் உள்ளனர். இதன் மூலம், தடுப்பூசியை பாதுகாப்பான மற்றும் பரவலான முறையில் கொண்டு செல்வதற்கான உத்தரவாதத்தை அளிக்க முடியும். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பல்லோ ஊழியர்கள் தேவையான பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் தடுப்பூசியை நிர்வகிக்க அப்பல்லோ மையங்களில் அவர்கள் பணியமர்த்தப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது வரை நாங்கள் 4 லட்சத்துக்கும் அதிகமானவர்களை பரிசோதித்துள்ளோம். மேலும் இரண்டரை லட்சம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளோம். இதன் மூலம் தடுப்பூசி கிடைத்தவுடன் அதை ஏராளமான மக்களுக்கு பாதுகாப்பாகவும், துரிதமாகவும் தடுப்பூசி கிடைப்பது உறுதிசெய்யப்படும். இந்திய தடுப்பூசி உற்பத்தியாளர்கள் உலகின் பெரும்பாலான தடுப்பூசி விநியோகத்தில் பங்களிப்பர் என்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். மேலும் சுகாதார சேவை வழங்குநர்களாக நாங்கள் பாதுகாப்பான மற்றும் விரிவான தடுப்பூசி விநியோகத்தை உறுதி செய்வோம்.” என்றார்.

வாடிக்கையாளர் தங்களை அப்பல்லோவில் பதிவுசெய்து, தடுப்பூசி மேம்பாடு பற்றிய சமீபத்திய புதிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும். இந்தத் தளத்தில் பதிவு செய்யும் ஒவ்வொரு பயனருக்கும் தளத்தில் ஒரு தனிப்பட்ட எண் உருவாக்கப்படும். அதைக்கொண்டு இந்தத் தளம் மூலம், பயனர்கள் தடுப்பூசிகளைப் பற்றிய புதிய தகவல்களை உடனடியாகப் பெறுவர்.

தடுப்பூசி தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காகப் பதிவு செய்ய, அப்பல்லோ செயலியைப் பதிவிறக்கம் செய்யலாம். அல்லது www.apollo247.com என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *