செய்திகள்

தமிழகத்தில் இதுவரை 69 ஆயிரத்து 514 பேருக்கு கொரோனா தடுப்பூசி

சென்னை, ஜன. 26–

தமிழகத்தில் 69 ஆயிரத்து 514 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 299 ஆண்கள், 241 பெண்கள் என மொத்தம் 540 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 157 பேரும், கோவையில் 56 பேரும், செங்கல்பட்டில் 38 பேரும், குறைந்தபட்சமாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரத்தில் தலா 3 பேரும், அரியலூர், தேனி, விருதுநகரில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர், கள்ளக்குறிச்சியில் புதிய பாதிப்பு இல்லை. தமிழகத்தில் இதுவரை 8 லட்சத்து 35 ஆயிரத்து 280 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனையில் தலா இருவரும் என 4 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். சென்னை, கோவை, கடலூர், திருவள்ளூரில் தலா ஒருவரும் என 4 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 12,320 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 627 பேர் புதிதாக நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரையில் தமிழகத்தில் 8 லட்சத்து 18 ஆயிரத்து 147 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். தமிழகத்தில் 4 ஆயிரத்து 813 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 53 லட்சத்து 86 ஆயிரத்து 25 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நேற்று

ஒரே நாளில் 55 ஆயிரத்து 710 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

69 ஆயிரத்து 514 பேருக்கு தடுப்பூசி

தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று ஒரே நாளில் 7,145 பேர் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்தும், 162 பேர் ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்தும் என மொத்தம் 7,307 மருத்துவ பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

தமிழகத்துக்கு இதுவரை 1 லட்சத்து 70 ஆயிரத்து 100 பேருக்கு செலுத்த தடுப்பு மருந்து ‘டோஸ்கள்’ வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை 69 ஆயிரத்து 27 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 67 ஆயிரத்து 514 பேர் ‘கோவிஷீல்டு’ மருந்தும், 1,701 ‘கோவேக்சின்’ மருந்தும் செலுத்தி உள்ளனர். இது 40.58 சதவீதம் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *