செய்திகள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் இதுவரை 12,740 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி: சுகாதாரத் துறை தகவல்

காஞ்சீபுரம், மார்ச் 11–-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் முன் உதாரணமாக காஞ்சீபுரம் பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டார்.

இதனை தொடர்ந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமணைகளில் நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது வருகிறது.

இதுவரையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் 12 ஆயிரத்து 740 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை உதவி இயக்குனர் டாக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *