செய்திகள்

தமிழகத்தில் இதுவரை 84.30 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை

சென்னை, அக்.16–

தமிழகத்தில் இதுவரை 84 லட்சத்து 29 ஆயிரத்து 741 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 2,660 ஆண்கள், 1,750 பெண்கள் என மொத்தம் 4,410 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 1,148 பேரும், கோவையில் 395 பேரும், சேலத்தில் 263 பேரும், குறைந்தபட்சமாக அரியலூரில் 18 பேரும், பெரம்பலூரில் 6 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இருந்தாலும் தொடர்ந்து நாளுக்குநாள் கொரோனா பாதிப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

தமிழகத்தில் இதுவரை 6 லட்சத்து 74 ஆயிரத்து 802 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த பட்டியலில் 4 லட்சத்து 7 ஆயிரத்து 577 ஆண்களும், 2 லட்சத்து 67 ஆயிரத்து 193 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 32 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 25 ஆயிரத்து 10 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 85 ஆயிரத்து 567 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 55 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,257 பேரும், கோவையில் 670 பேரும், செங்கல்பட்டில் 349 பேரும் அடங்குவர். இதுவரையில் 6 லட்சத்து 22 ஆயிரத்து 458 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 41 ஆயிரத்து 872 பேர் உள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 27 பேரும், தனியார் மருத்துவமனையில் 22 பேரும் என 49 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதுவரையில் தமிழகத்தில் 10 ஆயிரத்து 472 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 84 லட்சத்து 29 ஆயிரத்து 741 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நேற்று 89 ஆயிரத்து 67 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுஇவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *