செய்திகள் வர்த்தகம்

தேங்காய் எண்ணெய், கற்பூரம் கலந்து கொரோனா கிருமி நாசினி: பையனூர் ஆறுபடைவீடு தொழில்நுட்ப கல்லூரியில் அறிமுகம்

ஆல்கஹால், வேதியியல் பொருட்கள் இல்லாமல்

தேங்காய் எண்ணெய், கற்பூரம் கலந்து கொரோனா கிருமி நாசினி:

பையனூர் ஆறுபடைவீடு தொழில்நுட்ப கல்லூரியில் அறிமுகம்

செங்கல்பட்டு, பிப்.15-

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க தற்போது ஆல்கஹால், வேதியியல் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட கிருமி நாசினிதான் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவை உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியதாக உள்ளன.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் நகரத்தில் ஆல்கஹால், வேதியியல் பொருட்கள் கலப்படம் இல்லாமல் தேங்காய் எண்ணெய், கற்பூரம் கலந்து முழுக்க, முழுக்க இயற்கை முறையில் கிருமி நாசினி தயாரிக்கப்பட்டுள்ளது.

இயற்கை முறையில் தயாரிக்கப் பட்ட இந்த கிருமி நாசினி முதன் முதலாக தமிழகத்தில் மாமல்லபுரம் அடுத்துள்ள பையனூரில் உள்ள ஆறுபடைவீடு தொழில்நுட்ப கல்லூரி யில் அறிமுகப்படுத்தப்பட்டு பயன் பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

1 லிட்டர் நீரில் 25 மில்லி லிட்டர் இயற்கை முறை கிருமி நாசினியை கலந்து வீடுகள், வகுப்பறைகள், அலுவலகங்கள் ஆகிய இடங்களில் எந்திரம் மூலம் தெளித்து பயன்படுத்தலாம் என்றும் 60 நாட்கள் வரை இதன் திறன் இருக்கும் என்று இயற்கை முறை கிருமி நாசினி தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர். மாணவர்களுக்கு தொற்று ஏற்படாத வகையில் முதன் முறையாக அந்த தனியார் கல்லூரியின் வகுப்பறைகளில் இந்த இயற்கை முறை கிருமி நாசினி தெளித்து அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேசன் வேந்தர் கணேசன், இயக்குனர் அனுராதாகணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *