வர்த்தகம்

கொரோனா பாதிப்பை தடுக்க பள்ளி, கல்லூரிகளுக்கு பாதுகாப்பு சாதனங்கள்: பிரமா ஹிக்விஷன் அறிமுகம்

சென்னை, ஜன. 18

பிரமா ஹிக்விஷன் நிறுவனம், கல்வி நிறுவனங்களுக்கென பிரத்யேக தீர்வை உருவாக்கியுள்ளது. குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் ஆகியகல்வி மையங்களை பாதுகாப்பாக திறந்து செயல்படுத்த சி.சி.டிவி கேமரா, உடல் வெப்பம் அறிய தெர்மா மீட்டர், முகக்கவசம் அணிவதை கண்காணித்தல் போன்ற பல்வேறு சாதனங்களை வழங்குகிறது.

தமிழ்நாட்டில் பிரமா ஹிக்விஷன் 100 பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவ னங்களுக்கு பாதுகாப்பு தீர்வுகளை நிறுவியுள்ளது. இந்நிறுவனம் பல்வேறு கல்வி மையங்களும் பாதுகாப்பாக கல்வி மையங்களைத் திறந்து செயல்படுத்த அதிநவீன வீடியோ தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பின்னணியில் செயல்படும் பாதுகாப்பு கேமிராக்கள் அதிகம் பேர் கூடுமிடங்களில் அதாவது கல்வி வளாகங்களில் நிறுவுவதன் மூலம் மாணவர்கள் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இது உறுதி செய்யும். குறிப்பாக சமூக இடைவெளியை பின்பற்றுவது, மாணவர்களின் உடல் வெப்ப நிலையை கண்காணிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை இது மேற்கொள்ளும்.

கல்வி மையங்களை பாதுகாப்பாக திறந்து செயல்படுத்துவதன் மூலம் தான் நாம் முன்னோக்கி செல்ல முடியும். இதற்கு பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை தினசரி பழக்கமாகவே செயல்படுத்துவதன் மூலமே கரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். மேம்பட்ட வீடியோ தொழில்நுட்பம் பல்வேறு நிறுவனங்களில் கண்காணிப்பு பணிகளை விதிமுறைகளைப் பின்பற்றி செயல்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்ய உதவும்.

இது பற்றி அறிய www.hikvisionindia.com வலைதளத்தைப் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *