செய்திகள்

புதுவையில் இன்று 177 பேருக்கு கொரோனா தொற்று

புதுவை,அக்.18 –

புதுவையில் இன்று புதிதாக 222 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 190 பேர் புதுவையிலும் 14 பேர் காரைக்காலிலும் 4 பேர் ஏனாமிலும் 14 பேர் மாகேயிலும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா இறப்பு இல்லை. இன்று மட்டும் 306 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 4277 ஆக உயர்ந்தது. இவர்களில் 1384 பேர் புதுவையிலும் 67 பேர் காரைக்காலிலும் 39 பேர் ஏனாமிலும் 68 பேர் மாகேயிலும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2719 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவரவர் வீடுகளில் தங்கிச் சிகிச்சை பெறுகிறார்கள்.

இதுவரை தொற்று பாதித்து அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மொத்தம் – 33 141 பேர். அவர்களில் 574 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். குணமடைந்து வீடு திரும்பியவர்கள் – 28 290 பேர் ஆவார்கள். மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *