செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3வது நாளாக குறைந்தது

சென்னை, அக்.15–

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3–வது நாளாக குறைந்துள்ளது.

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-–

தமிழகத்தில் நேற்று 2,701 ஆண்கள், 1,761 பெண்கள் என மொத்தம் 4,462 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பட்டியலில், 12 வயதுக்கு உட்பட்ட 46 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 297 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்றும் அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 1,130 பேரும், கோவையில் 389 பேரும், சேலத்தில் 274 பேரும், செங்கல்பட்டில் 272 பேரும், குறைந்தபட்சமாக தென்காசியில் 6 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 6 லட்சத்து 70 ஆயிரத்து 392 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 31 பேரும், தனியார் மருத்துவமனையில் 21 பேரும் என 52 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதுவரையில் 10,423 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து 5 ஆயிரத்து 83 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,349 பேரும், கோவையில் 452 பேரும், சேலத்தில் 327 பேரும், செங்கல்பட்டில் 308 பேரும் அடங்குவர். இதுவரையில் தமிழகத்தில் 6 லட்சத்து 17 ஆயிரத்து 403 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். தற்போது சிகிச்சையில் 42 ஆயிரத்து 566 பேர் உள்ளனர். தமிழகத்தில் நேற்று 3-வது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 1 லட்சத்து 85,573 பேரும், செங்கல்பட்டில் 40,148 பேரும், கோவையில் 38,315 பேரும், திருவள்ளூரில் 35,342 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 192 அரசு, தனியார் ஆய்வகங்களில் இதுவரை 85 லட்சத்து 84,041 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று மட்டும 95 ஆயிரத்து 538 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *