செய்திகள்

தமிழகத்தில் நேற்று 449 பேருக்கு கொரோனா

சென்னை, பிப்.23–

தமிழகத்தில் நேற்று 449 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழகத்தில் நேற்று 279 ஆண்கள், 170 பெண்கள் என 449 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 151 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 8 லட்சத்து 48 ஆயிரத்து 724 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 2 லட்சத்து 34 ஆயிரத்து 491 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து நேற்று 461 பேர் வீடு திரும்பி உள்ளனர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 8 லட்சத்து 32 ஆயிரத்து 167 பேர் ஆகும்.கொரோனா சிகிச்சையில் 4,091 பேர் உள்ளனர்.

கொரோனா தொற்றினால் நேற்று 6 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12,466 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 4,142 பேர் உயிரிழந்துள்ளனர்.தற்போது 68 அரசு ஆய்வகங்கள், 186 தனியார் ஆய்வகங்கள் என 254 ஆய்வகங்களில் இதுவரை 1 கோடியே 68 லட்சத்து 55 ஆயிரத்து 994 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 50 ஆயிரத்து 48 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *