செய்திகள்

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா: நேற்று பாதிப்பு 22 ஆயிரத்தை தாண்டியது

புதுடெல்லி, மார்ச் 11–

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,854 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,854 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 12 லட்சத்து 85 ஆயிரத்து 561 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 126 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 58 ஆயிரத்து 189 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் இன்று ஒரே நாளில் 18,100 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 9 லட்சத்து 38 ஆயிரத்து 146 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு 1 லட்சத்து 89 ஆயிரத்து 226 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேற்று அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 13,659 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அங்கு அக்டோபர் 7-ந் தேதிக்கு பிறகு நேற்று தான் தினசரி பாதிப்பு மீண்டும் 13 ஆயிரத்தை கடந்துள்ளது.

இதேபோல கேரளாவில் 2,475 பேருக்கும், பஞ்சாபில் புதிதாக 1,393 பேருக்கும் தொற்று உறுதியானது. பஞ்சாபில் செப்டம்பர் 30-ந் தேதிக்கு பிறகு அதிக பாதிப்பாக நேற்று அமைந்துள்ளது.

கர்னாடகாவில் – 760, குஜராத்தில் – 675, தமிழ்நாட்டில் – 671, மத்திய பிரதேசத்தில் – 516, சத்தீஸ்கரில் – 456, டெல்லியில் – 370 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை மகாராஷ்டிராவில் 22,52,057, கேரளாவில் 10,83,530, கர்நாடகாவில் 9,56,801, ஆந்திராவில் 8,91,004, தமிழ்நாட்டில் 8,56,917, டெல்லியில் 6,42,030, உத்தரபிரதேசத்தில் 6,04,648, மேற்கு வங்கத்தில் 5,77,267 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பால் மகாராஷ்டிராவில் 54 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்று ஒரேநாளில் 126 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *