செய்திகள்

அண்ணா தி.மு.க. அவைத் தலைவராக நானே நீடிப்பேன்: மதுசூதனன்

சென்னை,

அண்ணா தி.மு.க.வின் அவைத் தலைவர் பதவியில் நானே நீடிப்பேன், அதில் எந்த மாற்றமும் இல்லை என்று மதுசூதனன் விளக்கம் அளித்துள்ளார்.

ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர்,

அண்ணா தி.மு.க. அவைத் தலைவர் பதவியில் நானே நீடிப்பேன்; எந்த மாற்றமும் இல்லை. அண்ணா தி.மு.க.வின் பொதுக் குழு கூட்டத்தை கூட்டுவது குறித்து இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை. அவைத் தலைவர் பதவி எனக்கு ஜெயலலிதா கொடுத்தது, நான் இருக்கும் வரை அவைத் தலைவரகவே இருப்பேன் என்று மதுசூதனன் விளக்கம் அளித்துள்ளார்.

உடல்நிலை காரணமாக அண்ணா தி.மு.க. அவைத் தலைவர் மாற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், மதுசூதனன் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

என்னை அவைத் தலைவராக தேர்வு செய்யும் போது, பண்ருட்டி ராமச்சந்திரன், பொன்னையன் ஆகியோர் போட்டியில் இருந்தனர் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *