செய்திகள்

கத்திவாக்கம் பகுதியில் கழிவுநீர் இணைப்பு பெற 19–ந் தேதி சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு

Spread the love

சென்னை, அக்.16–

திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட கத்திவாக்கம் பகுதியில் கழிவுநீர் இணைப்பு பெறுவதற்கான சிறப்பு முகாம் 19–ந் தேதி நடைபெறுகிறது.

திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட கத்திவாக்கம் –1 முதல் 2 பகுதிகளில் கழிவுநீர் குழாய் பதிக்கும் பணிகள் காமராஜர் நகர், ஜே.ஜே.நகர், எஸ்.வி.எம். நகர், உலகநாதபுரம், நெட்டுக்குப்பம், தாழங்குப்பம், முகத்துவாரம் குப்பம், அண்ணா நகர், கமலாம்மாள் நகர், சின்னக்குப்பம், காந்தி நகர், இந்திரா நகர், காட்டுக்குப்பம், நேரு நகர், பெரியக்குப்பம், திலகர் நகர் மற்றும் வள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளில் முடிவடைந்துள்ளது.

ஆகவே, வீடுகளுக்கு கழிவுநீர் இணைப்பு பெறுவதற்கு சென்னை குடிநீர் வாரியம், பகுதி அலுவலகம் –1–ல் எண்:19, மார்கெட்லேன், காலடிப்பேட்டை, திருவொற்றியூர், சென்னை என்ற முகவரியில் 19–ந் தேதி சனிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொது மக்கள் இந்த வசதியை பயன்படுத்தி கழிவுநீர் இணைப்பு பெறுவதற்கான விண்ணப்பத்தை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், பொதுமக்கள் கழிவுநீர் இணைப்பிற்கான தொகையை வரைவுக் காசோலையாக (Demand Draft / in favour of CMWSSB) சிறப்பு முகாமிலேயே செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. கழிவுநீர் இணைப்பு 2020–ம் ஆண்டு ஜனவரி முதல் வழங்கப்படும் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு 8144930901/ 8144930201 எண்களில் தொடர்பு கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *