செய்திகள்

நிலையான வேலைவாய்ப்பு தரும் நிறுவனங்கள் எவை? கல்லூரி மாணவர்கள் மூலம் ‘டை சென்னை’ உள்ளிட்ட 3 அமைப்புகள் ஆய்வு

Spread the love

சென்னை, நவ. 9–

வெகுஜன நிறுவனங்கள் நிலையான வேலைவாய்ப்பு வழங்குபவர்களாக இருப்பதையும், உற்பத்தி நிறுவனங்கள் மிக முக்கிய வாய்ப்பை வழங்குபவையாக இருப்பதையும் வெகுஜன தொழில்முனைவு குறித்த கருத்தாய்வு சுட்டிகாட்டியுள்ளது.

டை சென்னை நிறுவனம், கேம் நிறுவனம், பூர்னதா அமைப்பு இந்த மூன்றின் கூட்டு ஒத்துழைப்போடு இந்தியாவில் முதன்முறைாயக தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

வெகுஜன தொழில்முனைவோர்களின் செயல்பாடு, நிதிசார் அறிவு, சவால்கள் மற்றும் கண்ணோட்டங்கள் குறித்து ஒரு ஆழமான புரிதலை பெறவேண்டும் என்ற நோக்கோடு ஒரு தனியார் அமைப்பால் நடத்தப்பட்ட முதல் செயல்பாடாக இந்த தனிச்சிறப்பான கணக்கெடுப்பு ஆய்வு இருக்கிறது.

வெகுஜன தொழில்முனைவு என்பது பொதுவாக 5 அல்லது அதற்கு அதிகமான நபர்களை பணிக்கு அமர்த்தி, ஒவ்வொரு சமூகத்திலும் உள்ளூர் அளவிலான தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற லட்சக்கணக்கான உள்ளூர் வணிக / பிசினஸ் நிறுவனங்களை குறிக்கிறது. இத்தகைய வணிக / தொழில் நிறுவனங்கள், ஒரு பியூட்டி சலூன், சிறிய உணவகம், எலக்ட்ரானிக் பழுது நீக்கல் மையம் அல்லது உணவு தயாரித்து வழங்கும் கேட்டரர், மோட்டார் பைக் பணிமனை என பலவகையானதாக இருக்கக் கூடும்.

தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களிலிருந்து 9 கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை பூர்னதா அமைப்பு அனுகியது. அவர்களை ஒருங்கிணைத்தது. இந்த ஆய்வை மேற்கொள்ள பயன்படுத்திக் கொண்டது. 450க்கும் அதிகமான இத்தகைய தொழில்முனைவோர்களை இந்த மாணவர்கள் சந்தித்து கணக்கெடுப்பு ஆய்வு நடத்தினர்.

டை சென்னை அமைப்பின் தலைவர் சி.கே. ரங்கநாதன், கேம் இந்தியாவின் இணை நிறுவனர் மதன் படாகி, மதுரையை தளமாகக் கொண்டு செயல்படும் பூர்னதா அமைப்பின் நிறுவனரும், ஆதன்மை வழிகாட்டுனருமான பரத் கிருஷ்ண சங்கர் ஆகியோர் இந்தக் கணக்கெடுப்பு ஆய்வை – அதன் முடிவுகளை விளக்கினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *