செய்திகள்

கொரோனா பரவல் எதிரொலி: நாக்பூரில் பள்ளி, கல்லூரிகள் மார்ச் 7 ந் தேதி வரை மூடல்

நாக்பூர், பிப். 22–

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் மார்ச் 7-ம் தேதி வரை மூடப்படுகின்றன.

கேரளா, மகாராஷ்டிரா, சத்தீஷ்கர், மத்தியபிரதேசம், பஞ்சாப், காஷ்மீர் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளா மற்றும் மகாராஷ்ராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. யவத்மால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

புனே மாவட்டத்தில் நேற்றுபள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைஅறிவிக்கப்பட்டது. வரும் 28-ம் தேதிவரை பள்ளி, கல்லூரிகள் மூடப்படும். வைரஸ் பரவலை பொறுத்துஅடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அமராவதி மாவட்டத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் செய்யப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து நாக்பூர் மாவட்டத்திலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மகாராஷ்டிர மாநில அமைச்சர் நிதின் ராவத் கூறுகையில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நாக்பூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள், பயிற்சி மையங்கள் உள்ளிட்டவை மார்ச் 7-ம் தேதி வரை மூடப்படுகின்றன.

மேலும் வார இறுதி நாட்களில் சந்தைகள் மூட்ப்படுகின்றன. ஓட்டல்கள், உணவு விடுதிகள், திருமண மண்டபங்கள் 50 சதவீத நபர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும். மக்கள் இந்த உத்தரவை கடுமையாக கடை பிடிக்க வேண்டும் எனக் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *