செய்திகள்

தெரு விளக்குகள் எரிகின்றதா? காஞ்சீபுரத்தில் இரவு நேரத்தில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு

காஞ்சீபுரம், ஜன.6–

காஞ்சீபுரம் ஓரிக்கை பகுதியில் உள்ள நேரு நகரில் நேற்று மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் இரவு நேரத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து ஓரிக்கை செல்லம்மாள் நகர் பகுதிக்கு சென்ற அவர் இரவு நேரங்களில் அப்பகுதியில் உள்ள தெரு விளக்குகள் சரி வர எரிகின்றதா என்பதனையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மாவட்ட கலெக்டர் திடீரென இரவு நேரத்தில் வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த ஆய்வின்போது காஞ்சீபுரம் பெரு நகராட்சி ஆணையர் ஆர்.மகேஸ்வரி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *