செய்திகள்

பண்ருட்டி, நெய்வேலி தொகுதி வாக்கு எண்ணும் மையத்தின் பாதுகாப்பு பணிகள்: கலெக்டர் ஆய்வு

கடலூர்: –

கடலூர் மாவட்டத்தில் வரும் சட்டமன்ற பொதுத்தேர்தல் பண்ருட்டி மற்றும் நெய்வேலி சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்படவுள்ள அறையினையும் மேலும் கொரோனா பரவலை கட்டுபடுத்தும் வகையில் சமூக இடைவெளியை பின்பற்றி வாக்கு எண்ணும் மையத்திற்கு மேற்கொள்ளப்படவேண்டிய முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட தோ்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து கடலூர் மாவட்டம் பண்ருட்டி பேருந்து நிலையத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு வாக்களிக்கும் முறை குறித்து எடுத்துரைக்கப்பட்டதையும் பார்வையிட்டார்.

சட்டமன்ற பொதுத்தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் 100% வாக்களிப்பது குறித்து எதிர்வரும் தேர்தலில் தவறாமல் வாக்களிப்போம் என்ற உறுதிமொழியினை ஏற்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுபிரசுரங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் சந்திரசேகர் சாகமூரி வழங்கினார்.

வருகின்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிப்பது ஜனநாயக கடமை என்பதை உணர்த்தும் வகையிலான விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்து தானும் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ், வருவாய் அலுவலர் அருண்சத்யா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டிடம்) பாபு, மகளிர் திட்ட இயக்குநர் செந்தில் வடிவு, நெய்வேலி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பழனி, தேர்தல் வட்டாட்சியர் பாலமுருகன், பண்ருட்டி உதவி தேர்தல் அலுவலர் பிரகாஷ், மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *