செய்திகள்

பஸ் பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும்

“பஸ் பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும்’’

கடலூர் கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி அறிவுறுத்தல்

முகக்கவசம் அணியாதவர்களை ஏற்றவேண்டாம் என்று டிரைவர், கண்டர்களுக்கு உத்தரவு

கடலூர், அக். 17

கடலூர் பேருந்து நிலையத்தில், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி ஆய்வு மேற்கொண்டார்.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அனைவரும் கண்டிப்பாக அணியவும், சமூக இடைவௌியை கடைபிடிக்கவும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி தீவிரமாக கண்காணித்து வருகிறது.

நேற்று (16ந் தேதி) கடலூர் பேருந்து நிலையத்தில், பேருந்துகளில் பயணிகள் சமூ இடைவௌியை கடைபிடித்து அமரவேண்டும் என அறிவுரை வழங்கி, முகக்கவசம் அணியாமல் வருபவர்களை பேருந்துகளில் அனுமதிக்கக்கூடாது என ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு அறிவுரை வழங்கினார். சமூக இடைவௌி கடைபிடிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட பயணிகளை மட்டுமே பேருந்துகளில் ஏற்ற வேண்டும். பேருந்து நிலையத்தில் கடைகள் நடத்தும் வியாபாரிகளும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு பொருட்கள் வழங்கக்கூடாது.

மேலும் இரு சக்கர வாகனங்கள் பேருந்து நிலையத்தில் நிறுத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது. பேருந்து நிலையத்தில் செயல்படும் உணவகங்கள் மற்றும் வியாபார நிறுவனங்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளுக்கு வௌியே பொருட்கள் வைத்து வியாபாரம் செய்தல் மற்றும் உணவுகள் தயாரிக்காமல் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

ஆட்டோ டிரைவர்களுக்கும் அறிவுரை

பேருந்து நிலையத்தில் சமூக இடைவௌி கடைபிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் இருந்தவர்களுக்கு முகக்கவசம் அணிந்து பயணம் செய்யுமாறு அறிவுரை வழங்கி முகக்கவசங்களை வழங்கினார். இருசக்கர வாகனம், சைக்கிள் போன்றவைகளில் முகக்கவசம் அணியாமல் வருபவர்களை காவல்துறை கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து, ஆட்டோ ஓட்டுநர்களிடம், கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஆட்டோக்களில் அனுமதிக்கப்பட்ட நபர்களை மட்டுமே ஏற்ற வேண்டும் என அறிவுரை வழங்கி, கொரோனா தொற்று நடவடிக்கைளுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொண்டார்.

எனவே பொதுமக்கள் அரசு அறிவுறுத்தும் நடவடிக்கைகளை பின்பற்றி கொரோனா தொற்று பரவாமல் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். நகராட்சி அலுவலர்கள் தினந்தோறும் அனைத்து இடங்களிலும் சமூக இடைவௌி கடைபிடிக்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டு நோய் தொற்று பரவலை தடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது கடலூர் வட்டாட்சியர் பலராமன், காவல்துறையினர் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *