செய்திகள்

கூடுவாஞ்சேரி, வண்டலூரில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: கலெக்டர் பொன்னையா ஆய்வு

Spread the love

காஞ்சிபுரம், செப். 11–

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி-நந்திவரம் மற்றும் வண்டலூர் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் பா.பொன்னையா ஆய்வு மேற்கொண்டார்.

செங்கல்பட்டு கோட்டம், தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்று வரும் வண்டலூர் மேம்பால பணிகளைகளையும், பெருங்களத்தூர் மேம்பாலம் மற்றும் தாம்பரம் புறவழிச்சாலை , கிழக்கு தாம்பரம் புறவழிச்சாலைகளில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார். இப்பகுதிகளை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறையை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டார்.

மேலும், கூடுவாஞ்சேரி-நந்திவரம் பேரூராட்சிக்குட்ட ஜெயலட்சுமி நகரில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள வடிநீர் வாய்க்கால் பணிகளையும் கூடுவாஞ்சேரி- நெல்லி குப்பம் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலைகளை மேம்படுத்த சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

இவ் ஆய்வின் போது, செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் என்.செல்வம், வண்டலூர் துணை காவல் கண்காணிப்பாளர் வல்லவன், தேசிய நெடுஞ்சாலை திட்ட அலுவலர் மோகன், சாலை மேம்பாட்டு திட்ட இயக்குநர் ஞானசேகரன், செங்கல்பட்டு நெஞ்சாலை கோட்டாப் பொறியாளர் சத்தியசீலன், சென்னை பெருநகர வளர்ச்சி திட்ட கோட்டப்பொறியாளர் பரந்தமன், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் சாந்தகுமார், செயற்பொறியாளர் மனோகரன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *