செய்திகள்

அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வளர்ச்சி பணி: வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் ஆய்வு

வேலூர், பிப்.14–

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் ஆய்வு மேற்கொண்டு, 28 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகளை வழங்கினார்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் கடந்த மாதம் அணைக்கட்டு வட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து, மீதமுள்ள பொய்கை, புத்தூர், சத்தியமங்கலம், செதுவாலை, சேர்பாடி, திப்பசமுத்திரம், ஊனை, வல்லண்டராமம், ஊனை வாணியம்பாடி, வண்ணாந்தாங்கல், வரதலம்பட்டு, வசந்தநடை, விரிஞ்சிபுரம் ஆகிய 13 ஊராட்சிகளில் குடிநீர் வசதி, சாலை வசதி, மின் விளக்கு வசதி சரியாக நடைபெற்று வருகிறதா எனவும், குடிநீருக்காக போடப்பட்ட ஆழ்துளை கிணறுகள் பழுதடைந்திருந்தால் அதனை உடனடியாக சரி செய்து மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்திடவும் அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து, பிரதம மந்திரி ஆவாஷ் யோஜனா திட்டத்தின் கீழ் சமூக பொருளாதார கணக்கெடுப்பு பட்டியல் 2011–ல் இருந்து முன்னுரிமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ரூ.1.70 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்காக மின்னணு அனுமதி ஆணைகளை 28 பேருக்கு மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி, ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் சீனிவாசன், உதவி திட்ட அலுவலர் பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமால், இமயவர்மன், வின்சென்ட், ரமேஷ்பாபு, யுவராஜ், வட்டார உதவி பொறியாளர்கள் சிவக்குமார், வெற்றிவேலன், வட்டாட்சியர் முரளிகுமார், மேற்பார்வையாளர்கள் மற்றும் மண்டல துணை வட்டாட்சியர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *