செய்திகள்

போளுர் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி

திருவண்ணாமலை, ஜன. 20–

போளுர் அரசு மருத்துவமனை மற்றும் கொம்மனந்தல் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்று வரும் கோவிட்-19 தடுப்பூசி முகாமை கலெக்டர் சந்தீப்நந்தூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது, தடுப்பூசி போடும் நபர்களுக்கு உடல் வெப்பம், இரத்த அழுத்தம், பல்சோ மீட்டர் ஆகிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவது குறித்தும், கணினியில் ஆன்லைன் மூலம் பதிவு செய்வது, கோவிட்-19 தடுப்பூசி போடப்படுவது, தனி அறையில் வைத்து கண்காணிக்கப்படுவது குறித்தும் கலெக்டர் நேரில் பார்வையிட்டார். மேலும், மாவட்ட ஆட்சியர் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியார்களிடம், கோவிட்-19 தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து, அனைவரும் தைரியமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

கலெக்டர் சந்தீப்நந்தூரி செய்தியாளர்களிடம் கூறுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் கோவிட்-19 தடுப்பூசி மருந்து 16–ந் தேதி முதல் மூன்று நாட்களில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் உட்பட, சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் என மொத்தம் 276 நபர்களுக்கு போடப்பட்டுள்ளது என கூறினார்.

ஆய்வின்போது, நலப் பணிகள் இணை இயக்குநர் டாக்டர். கண்ணகி, திருவண்ணாமலை சுகாதார மாவட்ட துணை இயக்குநர் டாக்டர். அஜிதா, கொம்மனந்தல் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். பிரதீபா பிரியதர்ஷினி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *