செய்திகள்

காசநோய் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி: திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி துவக்கினா

Spread the love

திருவள்ளூர், பி்ப். 19–

திருவள்ளூர் மாவட்ட காசநோய் மையம் சார்பாக, காசநோய் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் துவக்கி வைத்தார்.

திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், தேசிய காசேநோய் ஒழிப்புத் திட்டத்தில் மாவட்ட காசநோய் மையம் சார்பாக, காசநோய் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமா கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி, சி.வி.நாயுடு சாலை வழியாக சென்று, காமராஜர் சிலை அருகில் நிறைவடைந்தது.

மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கூறியதாவது :

காசநோய் மைக்ரோ பாக்டீரியா டியூபர்குளோசி்ஸ் என்ற பாக்டீரியா மூலமாக பரவக்கூடியது. இது காற்றினால் எளிதில் பரவக்கூடிய ஒரு தொற்றுநோய் ஆகும் என்பதை பொதுமக்கள் அறியும் வண்ணம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்நோய்க்கான அறிகுறிகளாவது இரண்டு வாரங்களுக்கு மேல் தொடர்ந்து சளி இருந்தாலும், பசியின்மை காரணத்தினாலும், மாலை நேரத்தில் காய்ச்சல் ஏற்பட்டாலும், எடை குறைதல், சளியில் இரத்தம் வருதல் இது போன்ற அறிகுறிகள் கண்டறியப்பட்டால், இது காசநோய்க்கான அறிகுறிகளாக இருக்க கூடும். எனவே, பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து உடனே அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தினை அணுகி சிகிச்சை பெற்று பயன் பெற வேண்டும்.

மேலும், தனியார் மருத்துவர்கள், மருந்தகங்கள் மற்றும் பரிசோதனை இடங்களில் இந்நோய் கண்டறியப்பட்டால் உடனே அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதுவரை 14 காசநோய் அலகுகளில் 34,752 நபர்களுக்கு காசநோய் இருக்கா என பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதில் 3264 நபர்களுக்கு காசநோய்க்கான ஆரம்ப அறிகுறியாக கண்டறிந்துள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 2025-க்குள் திருவள்ளுர் மாவட்டம் காசநோய் இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட வேண்டும். அதற்கு மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இப்பேரணியில் துணை இயக்குநர் (காசநோய்) லட்சுமி முரளி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ஜே.பிரபாகரன் மற்றும் 350-க்கும் மேற்பட்ட பயிற்சி செவிலிய மாணவிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *