செய்திகள்

காஞ்சீபுரத்தில் அரசு ஆதிதிராவிடர் நல விடுதியில் சிறப்பு படிக்கும் அறைகள் : கலெக்டர் திறந்து வைத்தார்

Spread the love

காஞ்சீபுரம், பிப்.18-–

காஞ்சீபுரத்தில் அரசு ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு படிக்கும் அறைகளை மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா திறந்து வைத்தார்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 19 அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதிகள் மற்றும் 16 பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவ, மாணவிகள் நல விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு படிக்கும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் காஞ்சீபுரம் வந்தவாசி சாலையில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவிகள் நல விடுதி மற்றும் வேளிங்கப்பட்டறையில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவிகள் நல விடுதியில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் சிறப்பு படிக்கும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா, திறந்து வைத்தார்.

மேலும் மாணவ, மாணவிகளுக்கு மேஜை நாற்காலிகள், படுக்கை விரிப்புகள், போர்வைகள் போன்றவை வழங்கப்பட்டு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளுக்கு படிப்பதற்கு வசதியாக அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் நூலகத்திற்கு தேவையான புத்தகங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை மாணவ, மாணவிகள் நன்கு பயன்படுத்திக்கொண்டு கல்வி பயின்று சிறந்து விளங்கிட மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் சப்-கலெக்டர் செ.சரவணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தனலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *