செய்திகள்

வேளாண் இயந்திரங்களின் கண்காட்சி: கலெக்டர் சண்முகசுந்தரம் திறந்து வைத்தார்

வேலூர், ஜன. 21–

வேலூர் மாவட்ட பண்ணை இயந்திர விற்பனையாளர்கள் சார்பில் அமைக்கப்பட்ட வேளாண் இயந்திரங்களின் கண்காட்சியை கலெக்டர் அ.சண்முகசுந்தரம் திறந்து வைத்து பார்வையிட்டார்.

கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) / வேளாண்மை துணை இயக்குநர், வெ.வெங்கடேசன், வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய மற்றும் அரசு திட்டங்கள்) ஸ்டீபன் ஜெயக்குமார், வேளாண்மை துணை இயக்குநர், (மாவட்ட நீர்படிப்பகுதி) விஸ்வநாதன், வேளாண்மை பொறியியல் துறை, செயற்பொறியாளர் ச.ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உழவர் பயிற்சி நிலையத்தின் வேளாண்மை துணை இயக்குநர் எஸ்.இராமச்சந்திரன் வரவேற்றார். வேளாண்மை இணை இயக்குநர் மகேந்திர பிரதாப் தீட்சித் திட்ட விளக்க உரையாற்றினார்.

கலெக்டர் சண்முகசுந்தரம் கூறுகையில், 2020– -21ம் ஆண்டு வேளாண்மை துறையின் மூலம் 22 உழவர் உற்பத்தியாளர் குழுக்களும், தோட்டக்கலைத்துறையின் மூலம் 10 உழவர் உற்பத்தியாளர் குழுக்களும் தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கும் தொகுப்பு நிதியாக ரூ.5 லட்சம் தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது. அந்த நிதியை கொண்டு குழு உறுப்பினர்கள் மூலம் விவசாயத்திற்கு தேவையான பண்ணை கருவிகளை தேர்ந்தெடுக்க வழிவகை செய்ய இக்கூட்டம் உதவியாக இருக்கும் என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து பண்ணை இயந்திரங்கள் தேர்வு குறித்து உழவர் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள் மற்றும் பண்ணை இயந்திர விற்பனையாளர்கள் கலந்துரையாடல் நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குநர் பி.சுஜாதா நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *