செய்திகள்

கடலூரில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி: கலெக்டர் அன்புச்செல்வன் துவக்கி வைத்தார்

கடலூர், பிப்.14–

கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக, 2019–2020–ம் ஆண்டுக்கான, மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள், கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் துவக்கப்பட்டது. இப்போட்டிகள் கூடைப்பந்து, வாலிபால், கபாடி, ஹாக்கி, ஜுடோ, குத்துச்சண்டை, டென்னிஸ் மற்றும் இறகுபந்து ஆகிய குழுப்போட்டிகள் ஆண்களுக்கு நேற்று துவங்கியது. பெண்களுக்கு இன்று (14–ந் தேதி) துவங்கியது. மேலும் இன்று தடகளம், நீச்சல் (இருபாலருக்கும்) நடைபெற்றது. இவ்விளையாட்டு போட்டிகளில் 1,537 நபர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த மாவட்ட அளவிலான போட்டிகள் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே நடைபெறுகிறது . இதில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வர். மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெறுவர்களுக்கு முதலிடம் ரூ.1 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.75 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.50 ஆயிரம் என பரிசுத் தொகை வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பா.சிவா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *