செய்திகள்

வேலூர் கோட்டை வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணி: கலெக்டர் சண்முகசுந்தரம் துவக்கினார்

வேலூர், பிப்.25–

இந்திய செஞ்சிலுவை சங்க நூற்றாண்டு விழாவினையொட்டி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வேலூர் கோட்டை வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியை கலெக்டர் சண்முகசுந்தரம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தூய்மைப்படுத்தும் பணியை கலெக்டர் துவக்கி வைத்து ஊர்வலமாக சென்று கோட்டை வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.

இந்திய செஞ்சிலுவை சங்க நூற்றாண்டு விழாவினையொட்டி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டம் கோட்டை காந்திசிலை அருகிலிருந்து கோட்டை காவலர் வளாகம் வரை தூய்மைப்படுத்தும் பணியை கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து கலெக்டர் கோட்டை வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். இந்த தூய்மைப்படுத்தும் பணியில் தந்தை பெரியார் தொழில்நுட்ப கல்லூரியும், ஆக்ஸலீம் கல்லூரி மாணவ, மாணவிகள் என 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் இந்தியன் செட்கிராஸ் சொசைட்டி செயலாளர் சி.இந்தர்நாத், சேர்மன் வி.எஸ்.பர்வதா மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *