செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் 1450 பயனாளிகளுக்கு திருமண நிதி உதவி, தாலிக்கு தங்கம்

கடலூர், பிப். 18–

கடலூர் மாவட்டத்தில் 1450 பயனாளிகளுக்கு திருமண நிதி உதவி மற்றும் தலா 8 கிராம் தாலிக்கு தங்கம், இலவச வீட்டுமனை பட்டாக்களை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வழங்கினார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் ஏ.ஆர். மஹால் திருமண மண்டபத்தில் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் என்.முருகுமாறன், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி காட்டுமன்னரர் கோயில், பரங்கிப்பேட்டை, மேல்புவனகிரி, கீரப்பாளையம், குமராட்சி ஒன்றியங்களை சார்ந்த 1450 பயனாளிகளில் பட்டம், பட்டயம் படித்த 827 பயனாளிகளுக்கு ரூ.50,000 வீதம் மொத்தம் ரூ4,13,50,000 மதிப்பீட்டிலும், 10ம் வகுப்பு 12ம் வகுப்பு படித்த 623 பயனாளிகளுக்கு ரூ.25,000ஃவீதம் மொத்தம் ரூ.1,55,75,000 மதிப்பீட்டிலும் மொத்தம் ரூ.5,69,25,000 மதிப்பீட்டில் நிதியுதவியும், அனைத்து பயனாளிகளுக்கும் தலா 8 கிராம் வீதம் மொத்தம் 11.6 கிலோ கிராம் தாலிக்கு தங்கத்னையும் வழங்கினார்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் உள்ள சாஸ்திரி ஹாலில் நடைபெற்ற விழாவில் சிதம்பரம் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருந்து வரும் ஏழை எளிய மற்றும் சாமானிய மக்களை கண்டறிந்து அவர்களது ஆக்கிரமிப்புகளை நில வகைப்பாடு மாற்றம் செய்து வரன்முறை படுத்தும் திட்டத்தின் மூலம் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், புவனகிரி, ஸ்ரீமுஷ்ணம் ஆகிய வட்டங்களை சார்ந்த 668 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.3,32,79,404 மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டாகளையும் கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் சிதம்பரம் மதுபாலன், முன்னாள் அமைச்சர் செல்வி இராமஜெயம், சமூக நல அலுவலர் அன்பழகி, மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திருமாறன், ஒன்றிய குழு தலைவர் பரங்கிப்பேட்டை கருணாநிதி, வட்டாட்சியர் சிதம்பரம் ஆனந்த் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *