செய்திகள்

அரக்கோணம் பள்ளுர் கிராமத்தில் 156 பேருக்கு ரூ.90 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவி

Spread the love

ராணிப்பேட்டை, பிப்.27–

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம் பள்ளுர் கிராமத்தில் கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமையில் சிறப்பு மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 156 பயனாளிகளுக்கு ரூ.90 லட்சத்து 2 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் திவ்யதர்ஷினி வழங்கினார். அரக்கோணம் வட்டாட்சியர் ஜெய்குமார் வரவேற்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்ததாவது:– சமூக நலத்துறையின் மூலமாக அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு வழங்கப்படும் உபகரண பெட்டியும், சத்தான உணவுகளையும் உண்டு தாயும், சேயும் நலமுடன் இருக்க இத்திட்டங்களை செயல்படுத்துகிறது. அத்துடன் கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் கோமாரி நோய் வராமல் தடுக்க தடுப்பூசிகளை அத்துறையின் மூலம் போடப்படுகிறது. தோட்டக்கலைத் துறையின் கத்திரி, தக்காளி மற்றும் பலவகையான காய்கறி விதைகளையும், செடிகளையும் இத்தோட்டக்கலை மூலம் தரப்படுகிறது. இத்துடன் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு துறையின் மூலம் வருகின்ற 29–ந் தேதி அன்று நடைபெற உள்ளது. படித்த இளைஞர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

இம்முகாமில் முதியோர் உதவித்தொகை மற்றும் விதவை உதவித்தொகை 40 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், இலவச வீட்டுமனைப் பட்டா 51 பயனாளிகளுக்கு ரூ.45 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், தோராயப் பட்டா, பட்டா மாற்றம் மற்றும் சிறு விவசாயி சான்று 14 பயனாளிகளுக்கும், வேளாண் உபகரணங்கள் 16 பயனாளிகளுக்கு ரூ.1,66,500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும்,

தோட்டக்கலை உபகரணங்கள் 20 பயனாளிகளுக்கு ரூ.6,98,139 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், புதிய குடும்ப அட்டைகள் 6 பயனாளிகளுக்கு, இலவச தையல் இயந்திரம் 2 பயனாளிகளுக்கு ரூ.7,144 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், இலவச சலவைப் பெட்டி 3 பயனாளிகளுக்கு ரூ.15,054 மதிப்பிலான நலத்திட்டஉதவிகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வங்கிக்கடன் வாழ்வாதார இயக்கம் 4 பயனாளிகளுக்கு ரூ.31,14,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆக மொத்தம் 156 பயனாளிகளுக்கு ரூ.90 லட்சத்து 2 ஆயிரத்து 492 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

இம்முகாமில் தனி வட்டாட்சியர் ட்டி.மதிவாணன் நன்றியுரையாற்றினார். சார் ஆட்சியர் க.இளம்பகவத் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *