செய்திகள்

78 பேருக்கு ரூ. 20 கோடி மானிய கடனுதவி: திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி வழங்கினார்

Spread the love

திருவள்ளூர், ஜன. 29–

திருவள்ளூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழு, தாட்கோ திட்டத்தின் கீழ் 78 பேருக்கு ரூ. 20 கோடி மானியத்துடன் கூடிய கடனுதவியை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வழங்கினார். திருவள்ளுர் ஜே.என். சாலை, பாரத ஸ்டேட் வங்கியில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், மாவட்ட தொழில் மையம் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி இணைந்து, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு மகளிர் சுய உதவிக் குழு மற்றும் தாட்கோ ஆகிய திட்டங்களைச் சேர்ந்த 78 பயனாளிகளுக்கு ரூ. 20.12 கோடி மதிப்பிலான மானியத்துடன் கூடிய கடனுதவிகளை வழங்கி கலந்துரையாடினார்.

மாவட்ட கலெக்டர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு அரசு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களை ஆதரிப்பதற்கும், ஊக்கப்படுத்துவதற்கும் பாரத ஸ்டேட் வங்கி மூலம் வங்கி கடன் மேளாவானது நடத்தப்படுகிறது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை மூலம் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கும், மாவட்ட தொழில் மையம் சார்பாகவும், தாட்கோ சார்பாகவும் பல்வேறு திட்டங்கள் வாயிலாக பாரத ஸ்டேட் வங்கி சார்பில், 78 நபர்களுக்கு ரூ. 20.12 கோடி மதிப்பில் மானியத்துடன் கூடிய வங்கி கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பல நபர்களுக்கு வங்கிகடன் மானியத்துடன் வழங்குதவற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம் வை.ஜெயக்குமார், பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம் மணிவண்ணன், பாரத ஸ்டேட் வங்கி (முதன்மை மேலாளர்) எஸ்.ராஜன், துணை கிளை மேலாளர் காயத்திரி லட்சுமி, வங்கி ஒருங்கிணைப்பாளர், மேலாளர் டி.சதீஷ் குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *