செய்திகள்

2 சிறந்த எழுத்தாளர்களுக்கு பரிசுத் தொகை: கடலூர் கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வழங்கினார்

கடலூர், ஜன. 1–

கடலூர் மாவட்டத்தில் இரண்டு சிறந்த எழுத்தாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி பரிசுத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டு சங்கம் மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிடர் என 10 நபர்களுக்கும் ஆதிதிராவிடர் அல்லாத ஒருவருக்கும் ஆக மொத்தம் 11 எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகளுக்கு உதவித்தொகை ரூ.40,000 தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகின்றன.

2017-2018 -ம் ஆண்டிற்கு கடலூர் மாவட்டத்தில் இரண்டு சிறந்த எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட படைப்புகளை நூலாக வௌியிட்ட திட்டக்குடி வட்டத்தை சேர்ந்த த.ராஜிவ்காந்தி என்பவருக்கு “புதுமை புரட்சித்துறவி வள்ளலாரின் சமூகச் சீர்திருத்தங்களும் மாற்றங்களும்” என்ற படைப்பிற்கும், ச.பால்ராஜ் என்பவருக்கு ‘‘தமிழ் சமஸ்கிருத நிகண்டியல்’’ என்ற படைப்பிற்கும் முதல் தவணையாக தலா ரூ.20,000 பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வழங்கினார்.

இந்த நிகழ்வின்போது மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் (பொ) விக்னேஸ்வரன் உடனிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *