வாழ்வியல்

நரம்புகளை மேம்படுத்த உதவும் தேங்காய் பால்!

Spread the love

ஒரு கப் தேங்காய் பாலில் 89 மில்லிகிராம் மெக்னீசியம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மெக்னீசியத்தால் நரம்புகள் அமைதியாகும். அது மட்டுமில்லாமல் நமது இரத்தக் கொழுப்பு கட்டுப்பாட்டில் இருக்கும்.

தேங்காய் பாலில் வைட்டமின் சி, இ, பி1, பி3, பி5, பி6, இரும்புச்சத்து, செலீனியம், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துகள் உள்ளன. பசுவின் பால் ஒத்துக்கொள்ளாதவர்கள் தேங்காய் பாலை சாப்பிடலாம்.

பாஸ்பரஸ் சத்துகள் அதிகம் உள்ளதால் எலும்புகள் பலமாக்கும். தேங்காய் பாலில் இருக்கும் செலீனியம் எனும் வேதிப்பொருள் ஆர்த்தரைடீஸ் நோயைக் குணப்படுத்தும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தேங்காய் பால் கொழுப்பை அதிகரிக்காது. தேங்காய் பாலில் ஒமேகா3 என்ற முக்கிய வேதிப்பொருட்கள் இருப்பதால் உடலில் உள்ள நல்ல கொழுப்பை அதிகரித்து கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது.

தேங்காய் பாலில் இருக்கும் நார்ச்சத்து அதை உட்கொண்ட பின் வெகுநேரம் பசிப்பதைத் தடுக்கிறது. அதனால் நமது உடல் எடை தானாகவே குறைகிறது.

சில பேருக்கு அதிகமாகவே தலை முடி உதிர்வு ஏற்படும். என்ன செய்தாலும் அதை கட்டுப்படுத்த முடியாத நிலையில் தேங்காய் பால் நிச்சயம் ஒரு நல்ல தீர்வைக் கொடுக்கும்.

தேங்காய் பாலில், ஆன்டி பாக்டீரியல், ஆன்டி பங்கல் மற்றும் வைரஸ் பிரார்ப்படீஸ் அதிகம் உள்ளது. அதனால் இதைப் பருகினால், உடலில் எதிர்ப்புச் சக்தி தானாகவே அதிகரிக்கிறது. தேங்காய் பால் பருக இயலாதவர்கள் தினம் ஒரு இளநீர் பருகினால் நலம் விளைவிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *