செய்திகள்

மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு செல்போன் செயலி அறிமுகம்

சென்னை, பிப். 17–

மெட்ரோ ரயில் பயணிகளுக்குப் பயன்படும் செல்போன் செயலி சேவையை, சி.எம்.ஆர்.எல் (Chennai Metro Rail Limited -CMRL) நிறுவனம் தொடங்கியுள்ளது.

சென்னையில் தற்போது இரண்டு வழித்தடங்களில் 54 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. குறிப்பிட்ட இடத்தை விரைவாக அடைந்து விடலாம் என்பதால் மெட்ரோ ரயில் பயணத்தை பெரும்பாலான பொதுமக்கள் விரும்புகிறார்கள்.

இந்த நிலையில் மெட்ரோ ரயில் பயணிகளுக்குப் பயன்படும் செல்போன் செயலி சேவையை சி.எம்.ஆர்.எல் நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்த மொபைல் செயலி மூலம் மெட்ரோ ரயில் பயணத்தை மிக துல்லியமாகத் திட்டமிட்டு மேற்கொள்ள முடியும்.

இந்தச் செயலியில் மெட்ரோ ரயில் பயணம் தொடர்பாக பல வசதிகள் அளிக்கப்படுகின்றன. இந்தச் செயலி மூலம் மெட்ரோ ரெயில் வழித்தடத்தை அறியலாம். மேலும் மெட்ரோ ரெயில் வரும் நேரம், அங்கிருந்து மற்றொரு இடத்துக்குச் செல்ல இணைப்பு வாகன சேவை, பயணக் கட்டணம் உள்ளிட்ட தகவல்களைப் பயணிகள் இருந்த இடத்திலேயே இந்த ஆப் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *