செய்திகள்

புதுக்கோட்டையில் 22–ந் தேதி எடப்பாடி ஆய்வு

கொரோனா தடுப்பு நடவடிக்கை மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து

புதுக்கோட்டையில் 22–ந் தேதி எடப்பாடி ஆய்வு

புதுக்கோட்டை, அக்.18–

புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் 22–ந் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்கிறார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்டந்தோறும் சென்று முதலமைச்சர் ஆய்வு நடத்தி வருகிறார்.

இதுவரை 24 மாவட்டங்களில் ஆய்வு நடத்தி உள்ளார். கடந்த 13–ந் தேதி தூத்துக்குடியிலும், 14–ந் தேதி கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களிலும் ஆய்வு செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால் முதலமைச்சரின் தாயார் திடீர் மறைவு காரணமாக இந்த பயணங்களை ரத்து செய்தார்.

இந்த நிலையில் 22–ந் தேதி அன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு நடத்துகிறார்.

இதனை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

அன்றைய தினம் விவசாய சங்க பிரதிநிதிகள், சிறு குறு நடுத்தர தொழில் கூட்டமைப்பினர் மற்றும் மகளிர் சுயஉதவி குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.

பல்வேறு திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார். முடிவுற்ற திட்டங்களை திறந்து வைக்கிறார். ஏழை எளிய மக்களுக்கு முதலமைச்சர் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *