செய்திகள்

உயிரிழந்த 18 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம்: எடப்பாடி உத்தரவு

சென்னை,பிப்.2–

மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 18 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம், கபிலர் தெருவைச் சேர்ந்த கணேஷ் என்பவரின் மகன் மதன்குமார் என்பவர் மின் விளக்குகளின் வயர்களில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், சித்தாம்பூர் கிராமத்தைச் சேர்ந்த தங்கையா என்பவரின் மகன் முருகையன் என்பவர் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் வட்டம், அகரப்பட்டியைச் சேர்ந்த சுடர்மணி என்பவரின் மகன் சிவப்பிரகாஷ் என்பவர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் வட்டம், கலிங்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கம்பம் என்பவரின் மகன் ஆனந்தன் என்பவர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், நெடுமானூர் கிராமத்தைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவரின் மகன் பிரபாகரன் என்பவர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

மின்சாரம் தாக்கி…

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், கண்ணந்தங்குடி மேலையூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் விஜய் என்பவர் எதிர்பாராத விதமாக மின் கம்பி அறுந்து விழுந்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் செய்தியையும்;

பட்டுக்கோட்டை வட்டம், கல்யாண ஓடை கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன்கள் தினேஷ் மற்றும் கௌதம் ஆகிய இருவரும் வாய்க்காலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், வெடால் கிராமத்தைச் சேர்ந்த தனலட்சுமி என்பவரின் கணவர் பாண்டுரங்கன் என்பவர் மின்கம்பம் சாய்ந்து விழுந்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி வட்டம், அரியமந்தல்லூர் கிராமத்தைச் சேர்ந்த அம்மு நாயுடு என்பவரின் மகன் பாபு என்பவர் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

கடலூர் மாவட்டம் மற்றும் வட்டம், காயல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தணிகாசலம் என்பவரின் மகன் கபீர் என்பவர் வெளியே சென்ற போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், குல்லலக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

விருதுநகர் மாவட்டம் மற்றும் வட்டம், ரோசல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டியம்மாள் என்பவரின் கணவர் கண்ணன் என்பவர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

பாம்பு கடித்ததில்…

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டம், கடமலைக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த மகாராஜன் என்பவரின் மகன் முருகன் என்பவர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் வட்டம், பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த செல்வி என்பவரின் கணவர் சரவணன் என்பவர் மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டம், இடையாத்திமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரின் மனைவி சுமித்ரா என்பவர் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்த போது பாம்பு கடித்ததில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாசா வட்டம், வாலாசா பகுதியைச் சேர்ந்த லீலாவதி என்பவரின் மகன் விக்னேஷ் என்பவர் பாம்பு கடித்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், கீழவலம் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகன் பிரகாஷ் என்பவர் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த போது, பாம்பு கடித்ததில் உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

பல்வேறு நிகழ்வுகளில் மின்சாரம் தாக்கி மற்றும் பாம்பு கடித்து உயிரிழந்த 18 நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேற்கண்ட துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 18 நபர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *