செய்திகள்

55 காவலர்கள் குடும்பத்துக்கு இரங்கல்; தலா ரூ.3 லட்சம் நிதி உதவி: முதல்வர் எடப்பாடி உத்தரவு

சென்னை, பிப். 26–

உடல்நலக் குறைவு, விபத்துக்களில் உயிரிழந்த 55 காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

சென்னை பெருநகர காவல், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த மோகன்ராஜ்; புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ரா.சரளா; தேனாம்பேட்டை காவல் நிலையக் குற்றப்பிரிவில் முதல் நிலை பெண் காவலராகப் பணிபுரிந்து வந்த ஆ.சத்யா;

நீலாங்கரை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த கிரி; புதுவண்ணாரப் பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த த.ரமேஷ்; ஐ.சி.எப். காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த பிரேம் கோபால்; தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த பி.வெங்கடேஷ்;

புனித தோமையர் மலை காவல் நிலையக் குற்றப்பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த இரா. பாண்டியன்; செங்குன்றம் காவல் நிலையப் போக்குவரத்துப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த செ.சண்முகம்; பெரியமேடு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த லோ.சீனிவாசன்;

சென்னை, குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ரா. விஜயன் பிள்ளை; சென்னை, வெடிபொருள் கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்புப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த செல்வம்; கோயம்புத்தூர் மாநகரம், ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த தி.முருகேசன்; செல்வபுரம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த ரா.தங்கதுரை;

தருமபுரி மாவட்டம், பெரும்பாலை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ஸ்டாலின்; கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த பா.ராஜா ராமச்சந்திரன்; கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த செ.ராஜஸ்டீபன்;

மதுரை மாநகரம், அண்ணா நகர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த பொ. சுந்தரராஜன்; திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலை காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த க. ராஜேந்திரன்; திருப்பரங்குன்றம் போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த பெ. மலர்சாமி;

வெளிப்பாளையம்

நாகப்பட்டினம் மாவட்டம், வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ரா.குரூமுர்த்தி; பெரம்பூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த து. ராஜசேகரன்; ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த வாசுதேவன்;

சேலம் மாநகரம், நுண்ணறிவுப் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த அ.நடராஜன்; திருநெல்வேலி மாநகரப் போக்குவரத்துப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ராஜா; மேலப்பாளையம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த நூர் முகமது;

திருச்சி மாநகரம், அரியமங்கலம் காவல் நிலையத்தில் தலைமைக்காவலராகப் பணிபுரிந்து வந்த ஜாபர்கான்; திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சி.சுதா; மாவட்ட ஆயுதப்படையில் காவலராகப் பணிபுரிந்து வந்த ம.பரத்; திருவாரூர் மாவட்டம், திருத்துறைப் பூண்டி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த இளமாறன்;

கோவில்பட்டி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் தலைமைக் காவலர்களாகப் பணிபுரிந்து வந்த பாலசுப்பிரமணியன் மற்றும் மோகன்; வேலூர் மாவட்ட ஆயுதப்படையில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சங்கர்; விழுப்புரம் மாவட்டம், காணை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த முருகன்; தியாகதுருகம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த நா. ரவிச்சந்திரன்;

விருதுநகர் மாவட்டம், சூலக்கரை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த மாரிராஜ்; அருப்புக்கோட்டை நகர காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த மனுவேல்;

ஆகியோர் உடல் நலக் குறைவால் காலமானார்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

தமிழ்நாடு சிறப்புக் காவல்படை 3–ம் அணியில் காவலராகப் பணிபுரிந்து வந்த ஸ்ரீனிவாசன்; தமிழ்நாடு சிறப்பு இலக்குப் படையில் பணிபுரிந்து வந்த தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 4–ம் அணியைச் சேர்ந்த க. மதன்ராஜ்; 9–ம் அணியில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த வடிவேல் முருகன் மற்றும் காவலராகப் பணிபுரிந்து வந்த அஜித்குமார்;

ஜெயங்கொண்டம்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ராதாகிருஷ்ணன்; சென்னை பெருநகரக் காவல், திருவான்மியூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த ஆ.மருதுபாண்டி; ஜாம்பஜார் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த துரைராஜ்;

திருவொற்றியூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த பா. முருகன்; புனித தோமையர் மலை ஆயுதப்படை பிரிவில் காவலர்களாகப் பணிபுரிந்து வந்த சுதன் மற்றும் ஆ. ஆசிஸ்குமார்; கோயம்புத்தூர் மாநகரம், செல்வபுரம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த சுரேஷ்; ஈரோடு மாவட்டம், பவானி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த பி.கோபாலகிருஷ்ணன்;

நாகப்பட்டினம் மாவட்டம், மணல்மேடு காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த ரா. கிருஷ்ண ராஜ்குமார்; திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் காவலராகப் பணிபுரிந்து வந்த சகுந்தலா; திருச்சி மாவட்டம், மணிகண்டம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த ரஞ்சித்குமார்;

விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த தனபால்; விருதுநகர் மாவட்ட ஆயுதப்படையில் காவலராகப் பணிபுரிந்து வந்த அகிலன்; திருச்சுழி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சாம் பிரேம் ஆனந்த்;

ஆகியோர் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த மிகுந்த வேதனை அடைந்தேன்.

உடல் நலக் குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த 55 காவலர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேற்கண்ட சம்பவங்களில் உயிரிழந்த 55 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *