செய்திகள்

புதுவை கவர்னரைத் திரும்பப் பெறக் கோரி முதல்வர் உண்ணாவிரதம்

புதுவை, பிப். 5 –

புதுவை கவர்னரைத் திரும்பப் பெறக் கோரி முதல்வர் நாராயணசாமியே அமர்ந்து நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தை அவரது கூட்டணிக் கட்சியான திமுக புறக்கணித்தது .

புதுவை கவர்னர் கிரண்பேடியைத் திரும்பப் பெறக் கோரி மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து முதல்வர் நாராயணசாமி , அமைச்சர் சாஜகான் , எம்.பி. வைத்திலிங்கம் ஆகியோர் ஒதியஞ்சாலை அண்ணா சிலை எதிரே இன்று உண்ணாவிரதம் இருந்தனர். இதற்கு சிபிஐ , சிபிஎம், மதிமுக ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.

முதல்வர் நாராயணசாமியின் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசின் கூட்டணிக் கட்சியான திமுக இந்த உண்ணாவிரதத்தை புறக்கணித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *