செய்திகள்

ரூ.85¾ கோடி செலவில் பாலங்கள்: எடப்பாடி திறந்தார்

* ரூ.45 கோடியில் திருச்செங்கோடு -– அரியானூர் சாலையில்…

* சேலம், கோவை, தூத்துக்குடி உள்பட 6 மாவட்டங்களில்…

ரூ.85¾ கோடி செலவில் பாலங்கள்:

எடப்பாடி திறந்தார்

நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களுக்கான தொழில்நுட்பக் கையேட்டையும் வெளியிட்டார்

சென்னை, ஜன.9–

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (8–ந் தேதி) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் சேலம் மாவட்டம், சேலம் தெற்கு வட்டம், திருச்செங்கோடு -– அரியானூர் சாலையில் 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலத்தினை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மேலும் விருதுநகர், தூத்துக்குடி புதுக்கோட்டை, தேனி, கோயம்புத்தூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் 40 கோடியே 73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 பாலங்கள் மற்றும் ஒரு ரெயில்வே கீழ்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் திறந்து வைத்தார்.

மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் சாலை உட்கட்டமைப்பு வசதிகளின் முக்கியத்துவத்தினை உணர்ந்தும், பெருகிவரும் போக்குவரத்து தேவைக்கேற்ப சாலைகளின் கொள்ளளவை அதிகரிக்கவும், பாதுகாப்பான பயணத்தினை உறுதிசெய்யவும், மாநிலம் முழுவதும் புதிய பாலங்களை கட்டுதல், தேவையான பகுதிகளில் தரமான சாலைகளை அமைத்தல், சாலைகள் மற்றும் பாலங்களை பராமரித்தல் போன்ற பணிகளை புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், சேலம் மாவட்டம், சேலம் தெற்கு வட்டம், திருச்செங்கோடு –- அரியானூர் சாலை (கி.மீ.32/4 – தேசிய நெடுஞ்சாலை 544) அரியானூரில் 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலத்தினை முதலமைச்சர் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மேலும், விருதுநகர் மாவட்டம் – ராஜபாளையம் வட்டம், ராஜபாளையம் – அய்யனார்கோவில் வழி செண்பகத்தோப்பு சாலை, தென்றல் நகரில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; தூத்துக்குடி மாவட்டம் ,- சாத்தான்குளம் வட்டம், திசையன்விளை உடன்குடி சாலை, மணிநகரில் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; புதுக்கோட்டை மாவட்டம் – கறம்பக்குடி வட்டம், செங்கமேடு – மணமடை – வெட்டிக்காடு சாலை, செங்கமேட்டில் 3 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்;

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், பூலாநந்தபுரம் – குச்சனூர் சாலை, பூலாநந்தபுரத்தில் 6 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் வடக்கு வட்டம், காந்திஜி சாலை, கண்ணப்பன் நகரில், பீளமேடு மற்றும் கோயம்புத்தூர் வடக்கு ரெயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள கடவு எண். 13-க்கு மாற்றாக 14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ரெயில்வே கீழ்பாலம்;

சேலம் மாவட்டம் – வாழப்பாடி வட்டம், புழுதிக்குட்டை – சந்துமலை சாலை, புங்கமடுவில் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்; ஆத்தூர் வட்டம், சேலம் – உளுந்தூர்பேட்டை -அம்மம்பாளையம் நரிக்குறவர் காலனி சாலையில் வசிஷ்ட நதியின் குறுக்கே 5 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 2 பாலங்கள்;

என மொத்தம் 85 கோடியே 73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

தலைமைச்செயலாளர் சண்முகம்

மேலும், நெடுஞ்சாலைத்துறையில் பணிபுரியும் அனைத்து பொறியாளர்களின் பயன்பாட்டிற்காக நெடுஞ்சாலைத்துறையின் தொழில்நுட்பங்கள் மற்றும் துறையின் அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய ‘ரெடி ரெக்கனர் ஃபார் ஹைவே என்ஜினியர்ஸ்’ எனும் தொழில்நுட்பக் கையேட்டினை முதலமைச்சர் வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் க.சண்முகம், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் ஆ.கார்த்திக், தலைமைப் பொறியாளர் (நபார்டு மற்றும் கிராமச் சாலைகள்) எம்.கே. செல்வன், தலைமைப் பொறியாளர் (திட்டங்கள்) மா.முருகேசன், தலைமைப் பொறியாளர் (திட்டம் வடிவமைப்பு மற்றும் ஆய்வு) பி.ஆர்.குமார், தலைமைப் பொறியாளர் (தேசிய நெடுஞ்சாலை) ஆர். சந்திரசேகர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *