வாழ்வியல்

கிராம்பு : உடல் எடையை குறைக்கும்; இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக்கும்

கிராம்பு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளது. அவை நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்றுநோய்கள் தாக்காமல் பாதுகாப்பாக இருக்க உதவுகின்றன.

கிராம்பில் உள்ள யூஜெனோல் என்ற எண்ணெய் மூலிகை சேர்மத்தின் நல்ல மூலமாகும்.

பீனட் பட்டர் கடையில் வாங்குவதை விட வீட்டிலேயே ஈசியாக செய்யலாம்..! டிப்ஸ் இதோ.கிராம்பின் வலுவான கிருமி நாசினி பண்புகள் பல்வலி, ஈறுகள் பிரச்னை மற்றும் அல்சர் போன்ற வயிற்று புண்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன

கிராம்புகள் கிருமி நாசினிகள், வைரஸ் தடுப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளால் செறிவூட்டப்படுகின்றன. இதில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு தன்மை தொண்டை புண், சளி, இருமல் மற்றும் தலைவலி குணமாக உதவி செய்கிறது.

கிராம்பில் உள்ள யூஜெனோல் செரிமானத்தை எளிதாக்க உதவுகிறது. ஆரோக்கியமான எடை இழப்புக்கு முக்கிய காரணியாகும். மேலும் கிராம்பு இயற்கையாகவே வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது.

கிராம்பு உங்களுக்கு ஒரு அழகான சருமத்தை கொடுக்க உதவும்

கிராம்பு இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவும். ஜர்னல் நேச்சுரல் மெடிசின் நடத்திய ஆய்வில் நீரிழிவு எலிகளுக்கு கிராம்புகளை கொடுத்து சோதனை செய்ததில் இரத்த சர்க்கரை அளவு குறைவதாக நம்பிக்கைக்குரிய முடிவுகள் கிடைத்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *