நாடும் நடப்பும்

நேபாளத்துடன் நெருக்கம்

இந்த வாரத் துவக்கத்தில் இந்திய நேபாள உறவுகள் மேம்பட முக்கிய பேச்சுவார்த்தைகள் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக நடைபெற்றது. அங்கீகரிக்கப்படாத வர்த்தகத்தை கட்டுப்படுத்தவும் வர்த்தகம் மற்றும் போக்குவரத்து ஆகிய துறைகள் பற்றிய பல்வேறு அம்சங்கள் இந்த நிகழ்வில் உயர்மட்ட அதிகாரிகள் விவாதிக்க நல்ல களமாக இருந்தது.

இந்த கூட்டத்தை அரசுகளுக்கிடையேயான ஐ.ஜி.சி. (IGC) கூட்டத்தில் இருநாட்டு வர்த்தக செயலாளர்களும் இதர உயர்மட்ட நிபுணர்களும் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் நேபாளம் கோரியது, ‘இதுவரை இந்திய சரக்கு ரெயில் வழியாக மட்டுமே சரக்குகளை கொண்டுவரவும் கையாளவும் அனுமதி இருப்பதால் தனியார் லாரி சர்வீஸ் உதவியால் குறைந்த செலவில் உடனுக்குடன் சரக்குகளை கையாள முடியாமல் வியாபாரம் சுருங்கி இருப்பதாக சுட்டிக்காட்டி, தனியார் சரக்கு கையாளும் வசதிகளுக்கு ஒப்புதல் கோரினர்.

நேபாளத்தின் மேற்கே பைரஹாவா நகரில் புத்தர் பெயரில் புதிய சர்வதேச விமான நிலையம் 2015லேயே திறக்கப்பட இருந்ததாகவும் அப்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கட்டுமானம் ஆட்டம் கண்டது. மீண்டும் புனரமைப்பு செய்யும் பணிகள் தாமதப்படுத்தப்பட்டது.

பைரஹாவா அருகே 2 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் லிம்பினியில் தான் புத்தரின் பிறப்பிடம் இருப்பதால் இந்திய யாத்திரீகர்களின் வருகை அங்கு அதிகமாகும்.

நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் இருந்து 250 கிலோ மீட்டரில் இருக்கும் லும்பினி ஓர் பரபரப்பான தொழில் மையமும் ஆகும். ஆகவே இந்தியர்கள் வர்த்தக ரீதியாகவும் யாத்திரீகர்களாகவும் சென்று வரக்கூடிய சுற்றுலா பகுதி ஆகும்.

இதையெல்லாம் மனதில் கொண்டு அந்நாட்டின் சர்வதேச விமான நிலையத்தை கட்டிக்கொடுக்க முன்வந்தால் நமக்கு நேரடியாக பெரிய பயனில்லாது இருந்தாலும் சென்று வருவதற்கு வசதியாகவே இருக்கும்.

இந்திய எல்லையின் மிக அருகாமை என்பதால் நமது சரக்கு லாரிகள், சாலை வழியாக சொகுசு பஸ்களில் பயணிப்பவர்களுக்கு உடனுக்குடன் நுழைவு விசா தந்தும் வருகிறது நேபாளம்.

நம் கையில் நேபாள ரூபாய் இல்லை என்றாலும் இந்திய ரூபாயையும் அதன் அன்றைய மதிப்பு படி வாங்கிடவும் கடைக்காரர்கள் தயங்குவதும் இல்லை!

இப்படி பல காலமாக நமக்கு நெருக்கமாக இருக்கும் இப்பகுதியில் கட்டப்பட்டு வரும் விமான நிலையத்தைக் கட்டி முடிக்க திணறும் நேபாளம் ஒருகட்டத்தில் சீனாவின் உதவியை கோரலாம்! சீனர்கள் இப்படி ஒரு சந்தர்ப்பத்தை கை நழுவ விடமாட்டார்கள். நினைத்தால் இந்திய எல்லைக்குள் வந்து செல்ல ஏதுவான தூரத்தில் இருக்கும் இந்த பகுதியில் சர்வதேச விமான நிலையத்தை அமைக்க நிதி உதவியுடன் கட்டுமான உதவிகள் செய்து தந்தால் அவர்கள் நாட்டு விமான சர்வீசுகளுக்கு அனுமதியை நேபாளம் மறுக்கவா முடியும்?

அப்படி ஒரு சாதகமான இடத்தை சீனாவிடம் சென்று விடாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக இந்தியாவே உதவ முன்வரவேண்டும். அது நமது பாதுகாப்பு விவகாரங்களுக்கும் மிக சாதகமாகவே இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *