செய்திகள்

சிட்டி யூனியன் வங்கியின் நிகர லாபம் ரூ.193.54 கோடி

Spread the love

கும்பகோணம், நவ.8–

கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சிட்டி யூனியன் வங்கியின் நடப்பு ஆண்டில் 2வது காலாண்டில் 15 சதவீதம் உயர்ந்து, ரூ.193.54 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

நடப்பு 2019–20ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு மற்றும் முதல் அரையாண்டுக்கான நிதிநிலை முடிவுகளை அவ்வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி என்.காமகோடி வெளியிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:–

‘‘2019-–20ம் நிதியாண்டில் இரண்டாவது காலாண்டில் வங்கியின் வைப்பு தொகை 17 சதவீதம் உயர்ந்து ரூ.40,451 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் இதே காலக்கட்டத்தில் ரூ.34,534 கோடியாக இருந்தது. இதேபோல, வங்கி வழங்கிய கடன் தொகை 12 சதவீதம் வளர்ச்சியடைந்து ரூ.33,279 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டில் ரூ.29,785 கோடியாக இருந்தது.

வங்கியின் மொத்த வணிகம் 15 சதவீதம் உயர்ந்து ரூ.73,730 கோடியாக உள்ளது. நிகர லாபம் 15 சதவீதம் வளர்ச்சியடைந்து ரூ.193.54 கோடியாக அதிகரித்துள்ளது. வங்கியின் மொத்த வாராக்கடன் 2.85 சதவீதத்திலிருந்து 3.41 சதவீதமாக அதிகரித்துள்ளது. நிகர வாராகடனும் 1.90 சதவீதமாக அதிகரித்துள்ளது. முதல் அரையாண்டில் வரிக்கு பிந்தைய லாபம் 15 சதவீதம் உயர்ந்து ரூ.379.18 கோடியாக அதிகரித்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தில் மந்த நிலை இருந்த போதிலும், சிட்டி யூனியன் வங்கியின் வணிகம் நிலையாக இருந்தது. நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில் 50 கிளைகள் புதிதாக திறக்க திட்டமிடப்பட்டுள்ளது’’.

இவ்வாறு என்.காமகோடி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *